Saturday, May 25, 2013

My Blog: kanchi periyavarudan A.K.Velan

My Blog: kanchi periyavarudan A.K.Velan: இதனை படிக்க my blog;kanchi periyavarudan akvelan எனும் மேலே உள்ள சிறிய எழுத்தில் உள்ள வார்த்தையை க்ளிக் செய்யவும் .காஞ்சி  பெரியவருடன்  ஏ .கே .வேலன்     Scorpion Wings,: From the bookParamacharyarpages   From the bookParamacharyarpages A.K. V...

Friday, April 19, 2013

My Blog: A.K.VELAN'S PHOTOS

My Blog: A.K.VELAN'S PHOTOS:[இதனை அழுத்தி பார்க்கவும் ] ஏ .கே .வேலனின்  சில  அரிய புகைப்படங்கள் .மற்றும்  அவரை பற்றிய சில தகவல்கள் கலைமாமணி  ஏ.கே .வேலனார் 'தை பிறந்தால் வழி பிறக்க...

My Blog: ஏ .கே .வேலனின் வாழ்க்கை வரலாறு.முதல் பகுதி

My Blog: ஏ .கே .வேலனின் வாழ்க்கை வரலாறு.முதல் பகுதி:   ஏ .கே .வேலனின்   வாழ்க்கை வரலாறு .முதல் பகுதி  [இதனை படிக்க மேலே my blog;ஏ .கே.வேலனின் வாழ்க்கை வரலாறு என்று சிறிய எழுத்தில் உள்ள வார்த்தையை அழுத்தவும் .

Monday, March 11, 2013


A.K.VELAN'S THREE SONS A.K.V.KALAIGNANI[THIRD SON],.  K.SHIVAN[A.K.V.SIVAGNANI-SECOND SON],A.K.V.VINGNANI WITH ACTOR SIVAKUMAR
ஏ கே .வேலன் அவர்களின் பேரன் திருமண விழாவில் எடுத்த புகைப்படம் 
15-5-2013



ஏ .கே.வேலனின்  மூன்று மகன்களுடன் நடிகர் சிவகுமார் .முதலில் நிற்பவர் இளைய மகன் 

ஏ .கே.வி.கலைஞானி ,அடுத்து நிற்பவர் 

கே.சிவன் என்கின்ற சிவஞானி ,மூன்றாவதாக  நிற்பவர் ஏ .கே.வி.விஞ்ஞானி 

                                                                               


மக்கள் குரல்  தினசரி நாளிதழிலில் வெளியான

செய்தி  

                                                                                                                                                     



கடந்து  வந்த  பாதை   . .கே .வேலன் 

அரசியல் வாழ்க்கை    :
the book- ANNA:THE LIFE AND THE TIMES OF C.N.ANNADURAI[page no 168]

   THE DMK PARTY ORGANS AND JOURNALS TARGETED THE LITERATE AND THROUGH  THEM THE UNLITTERED.THERE WAS NO DEARTH OF THEM.MALAIMANI[THE EVENING  JEWEL WASISSUED FROM MADRAS]ANNA'SDRAVIDANADU,LATER KANCHI,KALAINGER KARUNANIDI'S MUROSOLI[THE DRUM BEAT] AND NAM
NADU[OUR COUNTRY],EDITED BY ANNA  WOULD BECAME THE
PROMINENT ORGANS OF THE PARTY .SEZHIAN'S MANRAM
[ASSOCIATION], KACHI MANIMOZHI'S  PORVAAL[BATTLE SWORD],
PERASIRIYAR ANBAZHAGAN AND RADHA MANALAN'S PUDHU VAZHVU
[NEW LIFE], TORPEDO JANARTHANAM'S THOZHAN[COMRADE]
C.P.CHITARASU'S THEEPORI[SPARK] A.K.VELAN AND T.K.
SRINIVASAN'S ERIMALAI[VALCANIO],LATER T.K.SRINIVASAN AND
R.M.VEERAPPAN'S GNAYIRU[SUN],A.V.P.ASAITHAMBI THANIARASU
[INDEPENDENT RULE]TOOK THE MOVEMENT'S MESSAGE TO THE
DIFFERENT PARTS OF THE STATE.[ARANGANNAL NINAIVUGAL,76]
R.KANNAN     [books.google.co.in/books?isbn=8184753136 


மேலும் சில தகவல்கள் ஏ.கே. வேலனைப் பற்றி  
                             monthly magazine of our union
                      History of sangh[page no-10]
                      SRES-NFIR
SOUTHERN RAILWAY EMPLAYEE'S SANGH
PAGE NO-10 to94
SINCE THE OFFICE WORK IN PERAMBUR UNION IS
INCREASED, SHRI.P.R.K.SHARMA.B.A., WAS APPOINTED
AS THE OFFICE MANAGER IN WHOSE PERIOD ENGLISH
MONTHLY PUBLICATION BY NAME'  M&S.M.RAILWAY MEN'
CAME OUT FIRST.SOON AFTER TAMIL PUBLICATION IN THE NAME OF THOZHILALI ALSO CAME OUT UNDER THE
EDITORSHIP OF A.K.VELAN.
www.sresindia.org/index.php? option=com

 .கே .வேலனுக்கு தந்தை  பெரியாரின் அழைப்பு  
நான்கு சுவர்களுக்கிடையே ,நாற்பது       மாணவர்களுக்கு  ஆசிரியனாக ,

       உயிரெழுத்து 12, மெய்யெழுத்து 18 என்று
       அரைத்த மாவையே  ஏன் அரைத்துக் 
       கொண்டிருக்கிறாய் ,நாலரைக் கோடித்
       தமிழர்களுக்குப் பாடம் சொல்ல அழைக்கிறேன் ,
       வெளியே வா!
                                                    -  தந்தை பெரியார்

தந்தை பெரியாரின் அழைப்பை ஏற்று பள்ளி ஆசிரியர்  வேலையை விட்டுவிட்டு திராவிட இயக்கத்தில் சேர்ந்தார் .'எரிமலை' எனும் இதழை நடத்தினார் .இது
திராவிட கழக கொள்கையை பரப்பும் ஏடாக அமைந்தது .
அத்தருணத்தில் நாத்திகனாக வாழ்ந்த அவர் தம் பெயரை
A .K .வேலன்  என மாற்றிக்  கொண்டார் .
 மூத்த மகள் திருமணத்தில் கலைஞருடன்  வேலன்
                                                                                                                                                   
கருப்பையா மூப்பனார் ;
மூப்பனார் ஏ .கே.வேலனின் நெருங்கிய நண்பர் ."பாபநாசம் உயர் நிலைப் பள்ளியில் படித்தபோது எனக்கு கிடைத்த மூப்பனார் இப்போதும் என்னால் மறக்க முடியாத நண்பர் " என வேலன் 3-1-99அன்று வெளி வந்த தினத்தந்தி  பேட்டியில் குறிப்பிட்டுளார் .
                                                                                                                                                   
 கர்மவீரர் காமராசர் 

காமராசருடன் ஏ .கே.வேலன் 
அருணாச்சல நிலையம் கட்டிடத திறப்பு விழாவின் போது  கலைமாமணி ஏ .கே.வேலன்  அன்றைய தமிழக முதல்வர் கர்மவீரர் காமராசருடன்  
திரு.கு.காமராசர் பேருரை 
தலைவர்  அவர்களே 'பெரியோர்களே ,தாய்மார்களே !
உங்களுடைய விழாவில் கலந்துக் கொண்டு  புதிய கட்டிடத்தைத் திறந்து 
வைப்பதற்கு நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகின்றேன் .பலத் திறப்பு விழாக்களை நடத்தி இருக்கிறேன் .நடத்திக் கொண்டே இருக்கின்றேன் .
நான் மந்திரியாக இருக்கும் வரை நடந்துகொண்டே இருக்கும். அப்புறம் 
கூப்பிடுவார்களோ  மாட்டார்களோ எனக்குத் தெரியாது .அப்புறம் பார்த்துக் கொள்வோம் .இங்கு திறந்து வைக்கும் விழாவிலே விசேஷம் என்னவென்றால் .நன்றி மறவாமல் தான் பயின்ற பள்ளிக்கூடத்திற்கு , தன்னுடைய தந்தையின் பெயரால் கட்டிடம்க் கட்டிக் கொடுத்திருக்கிறாரே 
அதுதான் நன்றியை 



பாரதிதாசன் அவர்களுடன் ஏ.கே.வேலன் 
தஞ்சையில் மாதவன் பிள்ளை என்ற பெருமகன் ஒருவர் ஓவியக் கலை வல்லுனராக இருந்தார் ..இவரும் வேலனும் நண்பர்கள் .இவரது தூண்டுதலால் வேலனின் 'சூறாவளி 'நாடகம் குடந்தையில் தேவி நாடக சபையில் அரங்கேற்றமானது. நாடகத்தின் ஒரு நாள் வசூலை 
கதாசிரியருக்கு  அன்பளிப்பாகக்  கொடுப்பது வழக்கம் .அதன் படி ஏற்பாடு 
செய்து,பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் அன்றைய நாடகத்திற்குத் தலைமை வகித்தார் .
பாவேந்தரின் ஆவேசமான வாழ்த்து 
பெருந்திரளான கூட்டம் .நாடகக் கொட்டகையின் சுற்றுப் புற அடைப்புகளைப் பிய்த்துக் கொண்டு கூட்டம் உள்ளே நுழைந்து விட்டது
நாடகமோ வெற்றி ...வசூல் தொகையை பாரதிதாசன் மூலமாக வேலனுக்கு கொடுக்கச் சொன்னார்கள் 
"கூட்டமோ கொட்டகைக் கொள்ளாத கூட்டம் .
கொடுக்கின்ற காசோ குறைந்த அளவு .ஏனிந்த நிலை?தமிழுக்கும்,தமிழனுக்கும் நீங்கள் 
காட்டுகின்ற மரியாதை இது தானா ?  
எனக் கூறி தமிழுக்காகவும், இந்த நாட்டுக்காகவும் நீ எழுதி,எழுதி  சாவு  என்று ஏ .கே.வேலனை  ஆவேசமாக வாழ்த்தினார் 
[ கலைமாமணி ஏ .கே.வேலனின் வாழ்வும் பணிகளும்  என்கின்ற புத்தகத்திலிருந்து ---பக்கம் 30]
புகழ் மலர்கள் -பாரதிதாசன் கவிதைகள் -பூம்புகார் பிரசுரம்..
உள்ளார் 
[குறிப்பு :-விசை பலகை உதவிக் கொண்டுநகர்த்தி படிக்கவும் ] வேலன் அவர்களைப் பற்றி ஆறு கவிதைகள் பாவேந்தர் பாரதிதாசன் எழுதி உள்ளார்  படிக்கவும் ]
  
 கலைவாணர்   என் .எஸ். கிருஷ்ணனுடன் ஏ .கே.வேலன் 
வேலன் அவர்கள் தந்தை பெரியாருடன்  ஐந்து 
வருடங்களும் என் .எஸ் ..கிருஷ்ணன்  அவர்களுடன் பதினைந்து வருடங்களும் பழகி வந்தவர் என்பது மிகவும் குறிப்பிட தக்கது .
தமிழ் ஆசிரியராய் தன் வாழ்வை தொடங்கிய வேலனை ,கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்அவர்கள்  மூலம் திரை உலகம் நிரந்தரமாக தன்னுடைய ஒரு அங்கமாக்கி கொண்டது .வேலன் அவர்கள் முதல் படத்தை இயக்க தயங்கிய  போது N.S.K.அவர்கள் முதுகில் தட்டி கொடுத்து தைரியமூட்டியவர் .
கலைவாணரை பற்றி வேலன் [நேர்முகப் பேட்டி --தினத்தந்தி -3-1-1999-பக்கம்111-இதோ 
1948 இல் சென்னை வந்தேன் .எனது சிலம்பு நாடகத்தில் அன்றைய பிரபலம் கே.ஆர்.ராமசாமி நடித்தார் கைதி நாடகத்தில்  எஸ்.எஸ்.ஆர் நடித்தார் .அப்போது படங்களில் கலைவாணரின் நகைச்சுவைக்கு தனி மரியாதை இருந்தது அவர் சம்பந்தப் பட்ட நகைச்சுவை பகுதிகளை எழுதும் வாய்ப்பு எனக்கு ஜுபிடர் பிக்சர்ஸ் மூலம் வந்தது அப்படி வந்த வாய்ப்பில் நான் புகழ் பெற்றேன் தொடர்ந்து எனக்கு கலைவாணரின் நகைச்சுவை பகுதிகள் பணி தந்தார்கள் .இதனால் கலைவாணரே என்னை தன்னுடன் அமர்த்திக் கொண்டார் என் மீது தனி அன்புக் காட்டினார் இப்படி படிப்படியாக ,ஆனால் வேகமாக என் வளர்ச்சி சினிமாவில் அமைந்தது.
கலைஞர் கருணாநிதியுடன் ஏ கே.வேலன் 

                                                                       தி .மு .க.

      1962   ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகத்தினரால்
நடைப்பெற்ற   விலைவாசி உயர்வு போராட்டத்தில்                            
கழக முன்னணிப் பேச்சாளராக  இருந்த ஏ  .கே.வேலன்
தஞ்சையில் நடைபெற்ற போராட்டத்தில்  கலந்து  
 கொண்டு  சிறை சென்றார் .திருச்சி சிறையில் சில மாதங்கள் அரசியல் கைதியாக  இருந்தார் . சிறையில்  கலைஞர் கருணாநிதி ,அன்பில் தருமலிங்கம்அவர்களும் உடன் இருந்தனர் .சிறையிலிருந்துவிடுதலையாகி வெளி வந்த வேலன் அவர்கள்கலைஞர் அவர்களுடனும் ,அன்பில் தருமலிங்கம் அவர்களுடனும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம்
செய்து சொற்பொழிவாற்றினார் .
திராவிட முன்னேற்ற கழகத்தின் முதல் பொதுக்குழு தஞ்சையில் 
நடைப்பெற்றது அப்போது அறிஞர் அண்ணா ,நாவலர்.நெடுஞ்செழியன் ,கே.ஏ .மதியழகன் மூவரும் ஏ .கே.வேலன் வீட்டில் தங்கி தி.மு.க.வின் 
துணை விதிகளைத் தயாரித்துப் பொதுக்குழுவில் வைத்து அனுமதிப் பெற்றார்கள் ஈரோட்டில் நடைப் பெற்ற தி.மு.க.மாநாட்டிற்கு ஏ .கே.வேலன் தலைமை தாங்கினார் .
ஏ .கே.வேலனின் மூத்தமகள் திருமண விழாவில் கலைஞர் 

கலைஞர் அவர்கள் தஞ்சை சட்டமன்றத் தேர்தலில் 
வேட்பாளராக நின்றபோது ஏ .கே.வேலன் சென்னையிலிருந்து  வந்து தங்கி தேர்தல் சொற்பொழிவு 
நிகழ்த்தி கலைஞர் வெற்றிக்காகப் பாடுப் பட்டார் .
                                                   

    
அன்று தி .மு .க 
கட்சியினரால் உபயோகபடுத்தப் பட்ட  வேலனின் 
பிளை மௌத் கார் MSX 96[அருகில்  மகன்  விஞ்ஞானி .
                                      DMK FILMS
IN 1949,DMK FILMS WAS LAUNCHED A GENRE CATERING
TO THE IDEOLOGY OF THEDRAVIDA MUNETRA KAZHAGAM
[DMK]PARTY C.N.ANNADURAI,COMMENCED FILM PRODUCTION WITH SCREEN ADAPTIONS OF HIS OWN PLAYS.
LATER, WRITTERS LIKE A.V.P. ASAITHAMBI,A.K.VELAN
AND KANNADASAN PROVIDED SCRIPTS FOR THIER FILMS.
[REGIONAL FILM STUDIOS] entertainment.indianetzone.com<home>
regional films.
1962 ஆம் ஆண்டு நடைப்பெற்ற சட்டமன்ற  தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க .சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு 
வேலன்அவர்கள் தமது அருணாசலம் ஸ்டுடியோ வில்  வரவேற்பு 
அளித்து விருந்தும் கொடுத்துப் பாராட்டினார். 
வரும் தேர்தல்களில் எந்த  மாவட்டங்களில் அதிக சட்டமன்ற உறுப்பினர்கள்  தேர்ந்தெடுக்கப்  படுகிறார்களோ
.அந்த மாவட்டத்திற்கு சுழற்க்கோப்பை அளிப்பதாக வேலன்
அறிவித்தார்அதற்கு  பின்னர் 1967ஆம் ஆண்டு நடைபெற்றஅவசியம் இன்றி தி.மு.க ஆட்சியை கைப்பற்றியது
ஞாயிறு அச்சகம்  
 பள்ளி ஆசிரியர் பொறுப்பை விட்டுவிட்டு வேலன் திராவிட இயக்கத்தில் இருந்தபோது எரிமலை எனும் இதழை நடத்தினார் . எரிமலை இதழின் ஆசிரியராக வேலனும், நிர்வாகியாக அவர் மைத்துனர் கே.திருஞானசம்பந்தமும் பணியாற்றினார்கள் .எரிமலை மாத இதழ் தீவிரவாத ஏடு என அரசினரால் கருதப்பட்டு அதற்கு ஜாமீன் தொகை கட்டும் நிலை ஏற்பட்டதுஅந்த தொகையைக்  கட்ட இயலாத  காரணத்தால் அதனையே ஞாயிறு எனும் இலக்கிய  ஏடாக மாற்றி 
நடத்தினார் ஞாயிறு எனும் அச்சகம் ஒன்று நிறுவி அதன் மூலம் இதழை வெளியிட்டார் இந்த இதழை  தி.மு.க .வின் கொள்கையை பரப்புவதற் காகவே  நடத்தி வந்தார் .அறிஞர் அண்ணாவின் கொள்கைகளை விளக்கிப பேசும்  தத்துவமேதை டி .கே.ஸ்ரீநிவாசன் 'தாமரை செல்வன்'எனும் புனை பெயரில் இணை ஆசிரியராக இருந்தார் .தம் கடந்த வாழ்க்கையை  மறவாது பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அச்சு தொழிலை ஆரம்பித்தார் 


ஆர்.எம் .வீரப்பன் 
அண்ணா தி.மு.க. அமைச்சரும் ,எம் .ஜி .ஆர் கழக நிர்வாகியுமான ஆர்.ம்.வீரப்பன் அவர்கள் வேலனின் அச்சகத்திலேயே   தங்கி .
ஏ .கே.வேலன் வீட்டில் உணவு உண்டு 'ஞாயிறு'இதழின் பொறுப்பாளராக
எட்டு மாதங்களுக்கு மேல் பணியாற்றினார்  
 வேலனின் படபூஜையில் ஆர்.வீரப்பனுடன் வேலன் குடும்பத்தினர் .

                                                                   மேல் வரிசையில் இடமிருந்து வலமாக இரண்டாவது காணப்படுபவர்  ஆர்.எம்.வீரப்பன் .கீழ்வரிசையில் இரண்டாவது நம் ஏ .கே.வேலன் 

எம்.ஜி.ஆருடன் வேலனின் நட்பு
M.G.R. நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்த போது அவருக்காக வேலன் 
'பகைவனின் காதலி'என்ற நாடகத்தை கதை வசனத்தோடு எழுதிக் 
கொடுத்தார். அந்த நாடகத்தை நடத்தும் போது எம்ஜி.ஆரின் கால்கள் 
முறிந்து விட்டது .அப்பொழுது ஏ .கே.வேலன் அவர்கள்  ஆர்.எம்.வீரப்பனை  எம்.ஜி.ஆருக்கு அறிமுகம் செய்து,எம்.ஜி.ஆரின்  நிறுவனங்களை கண்காணிக்க ஏற்பாடு செய்தார் .வேலனால் எம்.ஜி.ஆருக்கு அறிமுகப் படுத்தப் பட்ட  ஆர்.ம் .வீரப்பன் பின்னாளில் 
எம்.ஜி.ஆர். அவர்களின் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
ஆட்சிக்கு வந்த போது அமைச்சராக  பட்டார் .
 எம்.ஜி.ஆர் நடித்து வெளி வந்த மாட்டுக்கார வேலன்  ஏ.கே.வேலனின் 
கதையாகும் .இது ஐந்து மொழிகளில்  எடுக்கப் பட்டு வெற்றி வாகை சூடியது.மூலக்கதை -ஏ .கே.வேலன் என போடக்கூட  முதலில் தயங்கினர்.
வேலனின்   மற்றும் ஒரு கதையான பவானி M.G.R. அவர்களின் 
அரசகட்டளை யாக எடுக்கப் பட்டது .
பழைய நட்பை மறவாத எம்.ஜி.ஆர் அவர்கள் வேலனின் படப் பிடிப்பு தளமான அருணாசலம் ஸ்டுடியோவில் நவரத்தினம் பட ஷூட்டிங்கின்
போது வேலனின் இல்லம் தேடி வந்து நலம் விசாரித்தார். வேலனின் எளிமையான வாழ்க்கையை கண்டு வியந்தார். வேலனின் பிள்ளைகளிடம் பேசி மகிழ்ந்தார் .வேலனையும், அவரது மனைவியையும் 
தமது இல்லத்திற்கு விருந்துக்கு அழைத்தார் .எம்.ஜி.ஆரின் இல்லத்திற்கு 
சென்ற வேலனையும் .வேலனின் மனைவி ஜெயலக்குமி அவர்களையும்
திருமதி. ஜானகி ராமசந்திரன் அவர்கள் அன்புடன் வரவேற்று உபசரித்தார்.நண்பர்கள் பேசி மகிழ்ந்தனர். மீண்டும் நட்பு தொடர்ந்தது
எம்.ஜி ஆர்  அவர்களின் அழைப்பினால்  வேலன் அவர்கள் அன்று தி.மு.க.விலிருந்து விலகி அண்ணா தி.மு.க.வில் சேர்ந்தார்.இது அன்றைய தின பத்திரிகைகளில் "பல ஆண்டு காலமாய் தி.மு.க.வில் இருந்த   ஏ .கே. வேலன் கட்சி மாறினார் "என எழுதியது .ஆனால் வேலனோ மீண்டும் அரசியல் வாழ்க்கையில் ஈடுப்பட விரும்ப வில்லை . அரசியலில்  இருந்து விலகியே இருந்தார் 


                        விலைவாசி போராட்டம் 
 சிறையில்     இருந்த வேலனுக்கு  வந்த கடிதங்கள்  இதோ உங்களுக்காக சில :


  





ஏ .கே.வேலன் அவர்களின் கையெழுத்தில் சில கடிதங்கள் 





மூதறிஞர் இராஜாஜி அவர்கள் கவர்னர் ஜெனரலாக இருந்த போது திருவையாறு 
தியாகராசர் ஆராதனை விழாவை தொடங்கி 
 வந்தார் .அவ்வமயம் கலைஞர் 
கருணாநிதியும்,ஏ .கே.வேலனும் 
பள்ளியகிரகாரத்தில் கருப்பு கொடிக் காட்டி
ஆர்ப்பாட்டம் செய்தனர் 

   

[சொந்த சிந்தனை இருக்கக் கூடாது கழகம்  சொல்வதை  கண் மூடித் தனமாகபின்பற்ற வேண்டும் என்ற அடக்கு முறையை பொறுக்க  முடியாமல் சிலர் பொங்கி எழுந்தனர் உதாரணத்திற்கு ஏ .கே.வேலன்.இவர் திராவிட கழகத்திலும்,பின்னர் திராவிட முன்னேற்ற கழகத்திலும் பேச்சாளராக இருந்தார் ] சுய சிந்தனைக்கும் ,தன்னுடைய முன்னேற்றத்திற்கும் கழகம் இடையூறாக இருக்கிறது என்பதை தெரிந்துக் கொண்ட ஏ .கே..வேலன் கழகத்தை விட்டு வெளியேறினார்
[துக்ளக் வார இதழில் வெளி வந்த கட்டுரையில் இருந்து  சில பகுதிகள்]


[THUGLAK----TAMIL WEEKLY-7-11-2012--PAGE NO 9.]
வேலனின் துணிவு வேலனின் 'இராவணன் 'நாடகத்திற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது .அது அரசுக்கு எதிராக எழுதப்பட்டதாகக் கருதி அன்றைய அரசு வேலன் அவர்களிடமிருந்து கையெழுத்துப் படியைப்  பறித்துக் கொண்டது ஆனால் அதற்கு வேலனோசிறிதும் தளர்வோ அச்சமோகொள்ளாமல்மீண்டும்அதைஒருமுறைஎழுதினார்பிரெஞ்சு அரசின் எல்லை பகுதியானகாரைக்காலில்அந்நாடகத்தைபுத்தகமாக அச்சிட்டார் .தூத்துக்குடியில் நடைப் பெற்ற மாநாடு ஒன்றிலேயே அனைத்துப் படிகளும்  விற்றுத் தீர்ந்து விட்டன இவர் தம் நாடக ஆற்றலுக்கு இந்நிகழ்ச்சி ஒன்றே சிறந்த சான்றாக விளங்குகிறது என்று 
ஏ.கே.வேலன்  நாடகங்கள் -ஒரு ஆய்வு என்னும் தலைப்பில் ஆய்வியல் நிறைஞர் பட்டத்துக்காக [பி .எச்டி ]நூல் எழுதிய பேராசிரியர் அ .நடராசன் அவர்கள் குறிப்பிட்டுளார் .

திரைப்படத் துறையில் வேலன் 

வேலன் எழுதிய 'கைதி' நாடகத்திற்குதலைமை தாங்கிய  எம்.கே.தியாகராஜ பாகவதர்வேலனை  தாம் நடிக்கும் ஒரு படத்திற்கு கதை எழுத சென்னை வருமாறு கேட்டுக் கொண்டார்.ஏ .கே.வேலனின் நெருங்கிய நண்பர் யதார்த்தம்   'தஞ்சையில் இருந்தால் திரை உலகிற்கு செல்ல இயலாது.'என சென்னைக்கு வர சொல்லி வற்புறுத்தினார் .பின்னர் என்.எஸ்,கிருஷ்ணனும் அழைக்க வேலன் சென்னை வந்தார் .இவர் பல திரைப் படங்களுக்கு கதை,வசனம் எழுதி தந்தார் .அன்று பல படங்களில் அவர் பெயர் வராது .கதை இலாகா என்றுதான்  டைட்டில் போடுவார்கள்.
என வேலனனின் நேர்முக பேட்டி ஒன்று தினமணி பத்திரிகையில் வெளி வந்தது . சுகம் எங்கே ,வணங்காமுடி ,லவகுசா,அரிச்சந்திரா ,கண்ணன்கருணை ,நீதிபதி ,நல்லதங்காள்,சதாரம்,எம.ஏ.தம்மன்னா
 [தெலுங்கு] போன்றவை அவரது கதையே .இவர் எழுதிய 
இருளும் ஒளியும்  என்ற நாடகம் 1954- கே.ராம்நாத் இயக்கத்தில் 
விடுதலை என்ற பெயரில் வெளி வந்தது.1955-ல் வெளிவந்த டாக்டர் சாவித்திரி  படத்திற்கும் வேலன் கதை எழுதினார் . 


    


வேலன் கதை எழுதி வெற்றிப் பெற்ற திரைப்படங்கள் ;
எம்.ஜி.ஆர்.நடித்து வெற்றி படைத்த மாட்டுக்கார
வேலன் [ 5மொழிகளில் படமாக்கப் பட்டது]
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளி வந்த 'குறத்தி மகன்' கதையும் வேலன் எழுதியதே. 

தமிழின் மீது  அதிகப் பற்றுக் கொண்ட ஏ .கே.வேலன் படப்பிடிப்பின் போது START---CUT
என்று  ஆங்கிலத்தில் சொல்லாமல் முடுக்கு-
நிறுத்து  என்றுதான் சொல்வார்
                                               
   

ஏ .கே. வேலனின் கதை பவானி ,பின்னர்
எம் .ஜி .ஆர் அவர்களின் அரசக்கட்டளை ஆனது . 

THE HINDU.FEB- 16, 2012
FAME ELUDED THIS SIBLING OF AN ICON
TURNING DIRECTOR
FOR A VARIETY OF REASONS,SOME OF PROJECTS OF
M.G.R. AND CHAKRAPANI WERE ABANDONED AND
ONE SUCH FILM WAS BHAVANI WITH M.G.R IN THE LEAD ROLE.WRITTEN BY A.K.VELAN , IT WAS
DIRECTED BY THE NOTED CINEMATOGRAPHER  AND FILM MAKER MASTHAN.  CHAKRAPANI  TURNED  PRODUCER WITH THIS FILM.HOWEVER IT GOT SHELVED AFTER SOME PROGRESS.YEARS LATER,CHAKRAPANI REMADE IT  AS
ARASA KATTALAI  WITH MGR IN THE LEAD AND
DIRECTED IT TOO.IT ATTRACTED CONSIDERABLE
ATTENTION.
[CINEMA PLUS]FEB 16.2012

 கதை வசன ஆசிரியராக  உலகில்நுழைந்த கே.பாலசந்தர்   'நீர்க்குமிழி'படத்தின்   மூலம் டைரக்டர் ஆனார் .இவரை டைரக்டர் ஆக்கியவர் ஏ.கே.வேலன் 

தினத்தந்தி    26-4-20  பக்கம 20
வரலாற்றுச்  சுவடுகள் 
  1. ஏ .கே .வேலனுடன் கே.பாலசந்தர் [நீர்க்குமிழி படப் பிடிப்பில்]வேலன் அருகில் மகள்கள் மீனாட்சி ,
  2. அருணா ,பவானி  

  
  1. .
    K.BALACHANDER
             
 He was the music composer for music director Kumar’s first film Neerkumuli, a Tamil hit directed by K.Balachander,produced by 
A.K.Velan
[GOOGLE SEARCH]
Kalyanamalai Magazine Logo


Potpourri of titbits about cinema - K. Balachander
Some excerpts from his interviews:

producer A. K. Velan approached me with the offer to direct my play ‘Neerkumizhi’. The rest is history

  1. www.kalyanamalaimagazine.com/.../Potpourri_of_titbits_about_Tamil_c...


கவிஞர் அ.மருதகாசி -

4000 பாடல்களை  இவுலகிற்கு தந்த அ .மருதகாசி அவர்கள் 
ஏ .கே.வேலனின் 'சூறாவளி' நாடகத்திற்குதான் முதல்  முதல்  பாடல் எழுதினார்.இவரது பாடல் புத்தகம் ஒன்று ஏ .கே.வேலன் அன் சன்ஸ் அச்சகத்தில் 1986இல் அச்சிடப் பட்டு வேலனால் பாராட்டுதலும் வழங்கப்  பட்டது.வேலனும்,மருதகாசியும் சென்னை வந்த புதிதில் புரசைவாக்கத்தில் வாடகை வீட்டில் அருகருகே குடி இருந்தார்கள் என்பது  குறிப்பிடத் தக்கது .இன்று வேலனும்,இக் கவிஞரும் நம்மிடையே இல்லையென்றாலும் அவர்கள் இணைந்த 'தை பிறந்தால் வழி பிறக்கும் 
தங்கமே தங்கம் ....தங்க சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம் ...என்ற பாடல் தைத்  திங்கள் [பொங்கல்] அன்று பட்டி தொட்டியெல்லாம் ஒலித்துக் 
கொண்டுதான் இருக்கிறது

KAVYAMELA ---MALAYALA MOVIE  -STORY-A.K.VELAN
கீழே உள்ள வாசகத்தை கிளிக் செய்து பார்க்கவும் 

.MalayalaSangeetham Music and Movie Encyclopedia - AK+Velan | Profiles of Artists in the Malayalam Movie  kavyamela
malayalasangeetham.info
A.K.VELAN கேரள அரசின் விருதைப் பெற்றார் .

Production

The film was shot at Newton and Shyamala Studios. The film's storyline is similar to Guru Dutt's Pyaasa (1957, Hindi).[2] However, the film is an official remake of a Kannada film by Velan. T. E. Vasudevan bought the rights of the film from Velan with a shoestring amount of INR 1000. Owing to the commercial success of Malayalam version, Velan wanted to remake the film into Tamil. He bought back the rights for INR 5000, and made the Tamil film Devi (1968), which however failed in the box office.[1]
kavyamela-1965 [malayalam]
kantheredu nodu kanadam]
devi---tamil
mallepoovu -telugu

Kantheredu Nodu – ಕಣ್ತೆರೆದು ನೋMADE:  

.“The man’s memory is amazingಡು (1961/೧೯೬೧)

StarsSongs & Lyrics
DirectionOther Details
ProductionRelease info
WritersPlot Summary
Other CrewsTrivia
Sound RecordingAwards
Censor DetailsOnline Video
Audio & VideoExternal links
Stars:
Dr Rajkumar, Leelavathi, Balakrishna, Rajashree, Narasimharaju, Ramadevi, G V Iyer, Jayashree, Bharadwaj, Papamma, Eshwarappa, Vijayakumari, Ganapathi Bhat, Vasanthi, H Krishna Shastry, Kuppuraj, Veerabhadrappa, Revathi, Shakunthala
Direction:
DirectorT V Singh Takur
Associate DirectorG V Iyer
Assistant DirectorS K Bhagavan
Production:
BannerAranachelam Studios
ProducerA K Velan
Production ManagerM Rajarathnam, S Kamakshi, Varadarajan
Writers:
StoryA K Velan
ScreenplayG V Iyer
DialogueG V Iyer
LyricsG V Iyer
MusicG K Venkatesh
CinematographyB Dorairaj
EditorVenkataram, V N Raghupathi
ChoreographyP S Gopala Krishnan
ArtR B S Mani
CostumeManikyam
MakeupDoreswamy
Publicity DesignsStudio Ketha, Vijaya
StillsMurthy
சதாரம் 
V.C.Subburaman decided to retell the popular story now. ‘sathaaram’ of 1956 had an impressive lineup of actors like Gemini Ganesh, K.R.Ramaswami, Bhanumati, M.N.Rajam, K.Sarangapani, T.S.Baliah and C.K.Saraswathi. The dialogues were written by A.K.Velan and A.T.Krishnaswami. The movie was produced and directed by V.C.Subburaman. Gemini Ganesh got to finally act with the actress whom he had admired ever since he saw ‘swarga seema’ more than 10 years back. For Bhanumati, this role of an epitome of virtuousness must have been a complete change from that of the unrepentant seductress that she portrayed in ‘tenaaliraman'.




    மலையாள நடிகர் பிரேம் நசிரை   தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் 
செய்தார்' .தை பிறந்தால் வழி பிறக்கும்'படத்தில் இரண்டாவது 
கதாநாயகனாகவும் ,' பெரிய கோயில்' படத்தில் கதாநாயகனாகவும் நடிக்க 
வைத்தார்                                                   




  எல்லா மதமும் சம்மதமே என எண்ணிய வேலன் மேரியின் மைந்தன் என்ற தலைப்பில் 
பைபிள் நூலை[ BIBLE]கவிதை வடிவில் 
ஒரு புத்தகத்தை வெளியிட்டார் .இது ஒரு பிரபல கல்லுரி ஒன்றில் துணைப் பாட நூலாக  அமைந்தது .நாகூர் ஆண்டவர் கோவிலுக்கு
செல்வதை வழக்கமாக கொண்டவர் .
வேலன் தன நண்பர் க.ரசாராமுடன்





வேலன் தன் நண்பர் கலைஞர் கருணாநிதியுடன்

வேலனை பற்றிய விவரங்கள் 
ஆசிரியராக பணியாற்றிய பள்ளிகள் 
கரந்தைத் தமிழ்ச் சங்கம் [தஞ்சாவூர் ]
வீர ராகவா உயர்நிலை பள்ளி [தஞ்சாவூர் ]
நடத்திய பத்திரிக்கைகள்;
எரிமலை ,ஞாயிறு
எழுதிய நூல்கள் 
சிலம்பு,சாம்பாஜி ,சரிந்தக் கோட்டை ,இராவணன் ,கைதி,கங்கைக்கு அப்பால் ,காவிரிக் கரை யினிலே மீனாட்சி நாடகத் தமிழ் ,காவியக  ம்பன்,இறைவன்சிரிக்கின்றான்,க ண்ணன் கருணை ,[கீதை] மேரியின் திருமகன் [பைபிள் ],,வரலாற்று காப்பியம் ,அனுமார் அநுபூதி  போன்ற பல நூல்கள் 
எழுதி நடந்தேறிய  நாடகங்கள்  
சூறாவளி ,கைதி,கும்பகர்ணன் ,சிலம்பு,மேகலை,  மாவீரன் 
கம்சன் ,பகைவனின் காதலி ,எரிமலை  மற்றும் பல
முத்தமிழ் மன்றம் -ஆவடி -வேலனின் கதைகளான மாவீரன் கம்சன்,கும்பகர்ணன் போன்ற நாடகங்கள் நடிகர் 
மனோகர்  நடிப்பில் ஆவடி கனரக தொழிற்சாலையில் உள்ள 
விஜெயந்தா ஆடிட்டோரியத்தில் ஏ .கே.வேலன் தலைமையில் .சீனியர் 
ஜெனரல் மேனேஜர் பாண்டியன் அவர்கள் தலைமையில் நடத்தப் பட்டது.
 நாடகம் நடத்தி வந்த பணம் முத்தமிழ் மன்றத்திற்கு செலவிடப் பட்டது 
கூரை கட்டிடமாய் இருந்த முத்தமிழ் மன்றத்திற்கு அஸ்திவாரம்  போடப் பட்டது. 
ஆசிரியர் வேலனின் பகுத்தறிவு சிந்தனைக்கு சில எடுத்துக்காட்டுக்கள்  
'எலி ஏறி இறங்கலாம் .பெருச்சாளி சுரண்டலாம் கரப்பான்,வண்டு மொய்க்கலாம் பூச்சி,புழு நெளியலாம் வௌவல் புழுக்கை போடலாம் ........
ஆறறிவு படைத்த மனிதன் உள்ளே வந்தாலாகாதோ?அதிலும் பக்தியில் வந்தால் பாதகமா ?'[நாடகம்-சூறாவளி ]
                                                          Photo: R. Shivaji Rao 


MADE: Sivakumar with a passion for Kambaramayanam.
Walking to the Board High School in Sulur town and back everyday, gave the young boy time to memorise Tamil dialogue of film classics such as ‘Parasakti’ and ‘Veera Pandiya Katta Bomman.’ “Karunanidhi, Sakti Krishnasamy, A.K. Velan and A.P. Nagarajan stoked the love for literature in me,” he laughs

ஏ .கே.வேலனின் திரை உலக தம்பி திரு.சிவகுமார் அவர்கள் வேலன் அவர்களை நினைவுக் கூர்ந்து பேசியவை 

Watch "Sivakumar​in Nerukku Naer" on YouTube

https://www.youtube.com/watch?v=Vh7oMdR-znI&feature=youtube_gdata_player


படப்பிடிப்பு தளத்தில் வேலன்
கதை,வசனம் எழுதி,இயக்கி,தயாரித்த திரை படங்கள்    
 தை பிறந்தால் வழிப் பிறக்கும்,  வழி பிறந்தது ,பொன்னி திருநாள்,பெரிய கோயில் '
கைதியின் காதலி ,காவேரியின் கணவன் ,மங்கள சூத்திரம் [தெலுங்கு ],கண் திறந்த நூடு [கன்னடம்]தேவி,நீர்க்குமிழி [தமிழ்]அறிமுக இயக்குனர் 
கே .பாலச்சந்தர் [திரைக்கதை,இயக்கம்]நீர்க்குமிழி[தெலுங்கு]இயக்குனராக  நடிகர் திலகம் சாவித்திரி ] ,,உறங்காத கண்கள் போன்ற 16 திரைப் படங்களை உருவாக்கினார்

படப்பிடிப்பு தளத்தில் வேலன்
கதை,வசனம் எழுதி,இயக்கி,தயாரித்த திரை படங்கள்    
 தை பிறந்தால் வழிப் பிறக்கும்,  வழி பிறந்தது ,பொன்னி திருநாள்,பெரிய கோயில் '
கைதியின் காதலி ,காவேரியின் கணவன் ,மங்கள சூத்திரம் [தெலுங்கு ],கண் திறந்த நூடு [கன்னடம்]தேவி,நீர்க்குமிழி [தமிழ்]அறிமுக இயக்குனர் 
கே .பாலச்சந்தர்

வேலன் அவர்கள் தமது அருணாசலம் ஸ்டூடியோ  மற்றும் தம் அருணாசலம் பிக்சர்ஸ்  ஆகியவற்றிக்கு  யானையை  சின்னமாக வைத்திருந்தார் .அவர் தம் வீட்டில் யானை  ஒன்றை செல்லமாக வளர்த்தும் வந்தார்.அது அவரது பிள்ளைகளிடம் நன்றாக பழகியது.

நடிகர் திலகம் சிவாஜிகணேசனும் ஏ .கே..வேலனும் யானை அருணாவுடன் 
[இடம் -அருணாசலம் ஸ்டுடியோ ]
வேலனின் செல்ல யானை 








வேலனின் நூல் நிலையம்
அன்று அரிதான புத்தகங்கள் 2000 த்திற்கும் மேலாக வேலனின் இல்லத்தில் குடிக் கொண்டிருந்தது .கதை ,
இலக்கியம் ,வரலாறு ,கவிதைகள்,அரசியல் ,தத்துவம் 
மருத்துவம் ,ஜோதிடம் ,ஆங்கில நாவல்கள் ,நாடோடி 
பாடல்கள் ,நாடகங்கள்சிறுவர்களுக்கான புத்தகங்கள் என  தனித்தனியே பகுத்து வைக்கப் பட்டிருந்தது .அதில் சில கிடைக்க அரிதானவை .அவை அனைத்தும் வேலன் விரும்பி படித்தவை .அதன் பாதுகாப்புக் கருதி  புத்தகங்கள் ஆவடியில் உள்ள முத்தமிழ் மன்றத்திற்கும், தஞ்சை கூட்டுறவுகாலனியில் உள்ள ஓய்வூதியர்கள்  சங்க நூலகத்திற்கும்  அன்பளிப்பாகக் கொடுக்கப் பட்டது 
சென்னை அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கத்தில் 1958ஆம் ஆண்டு முதல் துணை தலைவராகப்  பல்லாண்டுகள் பணியாற்றினார் . இச்சங்கத்தின் மாதக் கூட்டம் -ஆண்டு கூட்டம் ஆகியன இவரது அருணாசலம் ஸ்டுடியோவில் நடைப்பெற உதவியதோடு அவர்களுக்கு 
உணவும் ,சிற்றுண்டியும்  அளித்து உறுப்பினர்களைப் பெருமைப் 
படுத்தினார் .கலைமாமணி ஏ .கே.வேலன் என்ற தலைப்பில் அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கம் மற்றும் அறக்கட்டளை 
சார்பாக ஜனவரி 2013 அகச்சுடரில் ஒரு கட்டுரை ய வெளியாகிஉள்ளது 


தந்தையை இழந்த பின் வேலனின் மூத்த மகன் விஞ்ஞானி [அறிஞர்
 அண்ணாவால் வைக்கப் பட்ட பெயர் ]மனமுருகி எழுதிய பாடல் 



              மூத்தமகன் ஏ .கே.வி.விஞ்ஞானி 
 
2002இல் நட்சத்திரப் பூச்சரம்  என்ற கவிதை நூலை 
மணிமேகலை பிரசுரம் மூலம் வெளியிட்டார் .




ஏ .கே.வி.வி ஞ்ஞானி ஒரு சிறந்த பாடலாசிரியர் .2013 இல் வெளிவந்துள்ள 
திருவள்ளுவர் பாமாலை என்ற புத்தகத்தில் அவரது  நான்கு கவிதைகள் வெளி வந்துள்ளது.வெளியீடு ---எழில் இலக்கியப் பேரவை 
அவற்றில் இரு கவிதைகள் இதோ 
உங்களுக்காக 

அளந்தவன்  இறைவன்

மூன்று பால்களில் உலகை

நிறைத்தவன் வள்ளுவன்  -   ஏ .கே.வி..விஞ்ஞானி




   



சிவஞானி என்கின்ற ஏ .கே.வி. சிவன்   -இவர் வேலனின் இரண்டாவது மகன் 

இவரே  வேலன் அவர்களின் மூன்றாவது மகன்  ஏ .கே.வி.கலைஞானி 
  













 வேலனின் இரண்டாவது மகன் சிவன் என்கின்ற ஏ .கே.வி . சிவஞானியும் ,இளைய மகன் ஏ .கே.வி.கலைஞானி யும்  திரு .ரஜினிகாந்துடன் ஏ.கே.வி.ஆயில்ஸ்   சார்பாக எடுக்கப் பட்ட புகைப்படம் .ரஜினி அவர்கள் வேலனிடம்,மரியாதையும் ,அன்பும்  கொண்டவர் .வேலனின் இல்லம் தேடி வந்து ஆசீர்வாதம் பெற்று சென்றவர்.



கண்ணதாசனுடன் நம் வேலன் 
ஏ .கே.வேலனின் மிக  நெருங்கிய நண்பர்களில் ஒருவர் கவியரசு..திரு.கண்ணதாசன்  அவர்கள்..
வேலனை கண்ணதாசன்  அவர்கள் உரிமையுடன்' வேலா வாடா 'என அழைப்பதையும் ,வேலன் அவர்கள் கண்ணதாசன் அவர்களை 'கண்ணதாசா வாடா,போடா  என   கூப்பிடுவதையும்  அவர்களுக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே அறிவார்கள்..