ஏ .கே .வேலனின் வாழ்க்கை வரலாறு.முதல் பகுதி
ஏ .கே .வேலன் என்கின்ற அ.குழந்தை வேலன்
பிறப்பு ;24-10-1921
பிறப்பிடம் -தஞ்சை மாவட்டம் ,ஆலங்குடி கிராமம்
தந்தை ;அருணாசலம் பிள்ளை.
தாயார் ;இராமாமிர்தம் . ஏ .கே .வேலனின் வாழ்க்கைக் குறிப்பு ;
தாத்தா சிவசாமி சேர்வை அந்த காலத்து மெட்ரிகுலேஷன் தேர்ச்சி பெற்றவர். பெரிய தமிழ் பண்டிதர் . தஞ்சை பேரறிஞரான உமா மகேஸ்வரன் பிள்ளையின் தந்தையான வேம்ப பிள்ளை தாத்தாவின் நெருங்கிய நண்பர் ஆவார். விக்டோரியா மகாராணி ஆட்சி அமைந்த புதிதில் தாத்தா சிவசாமிக்கு தாசில்தார் வேலை கொடுக்க பட்டது .ஆனால் ஆலங்குடி கிராமத்தில் அவர்
அருணாசலேஸ்வரர் ஆலயம் கட்ட முடிவு செய்தமையால்
வேலைக்கு செல்லவில்லை.. தமிழ் பண்டிதர் தாத்தாவை
சுற்றி எப்பொழுதும் தமிழ் பண்டிதர்கள் மற்றும் வித்வான்கள் கூட்டம் நிறைந்து இருக்கும்.. அன்று ஏ .கே .வேலனின் தாத்தா வீடு ஒரு தமிழ் சபையாக இருந்தது . .'கம்பன் வீட்டு கட்டு தறியும் கவி பாடும்' என்பார்கள் .அதை நிரூபிக்கும் வகையில் குழந்தை வேலனுக்கோ புரியாத வயதில் தமிழின் மேல் ஓர் ஆர்வம் வந்தது ..தமிழ் அறிஞர்களின் பேச்சை கூர்ந்து கவனிப்பார் .ஓடி விளையாட வேண்டிய
பருவத்தில் பெரியவர்களின் நடுவே உரையாடி கொண்டிருப்பார்.. கற்பதை விட கேட்பதே பெரிது 'என்பர் .'கண்டது கேட்க பண்டிதன் ஆவான்' என்பதற்கு புலவர் ஏ .கே .வேலனே சிறந்த உதாரணம் .
இவர் தந்தை அருணாச்சலம் பிள்ளை -
திரு .ஏ .கே .வேலன் தமது ஏழாம் வயதில் தந்தையை இழந்தவர் .கூட்டு குடும்பத்தில் தன் தாயாரின் அரவணைப்பில் வளர்ந்தவர் .தந்தையின் நினைவாக பின்னர் அருணாசலம் ஸ்டுடியோ ,அருணாசலம் பிக்சர்ஸ் ,அருணாசல நிலையம் என ஒவொன்றிலும் தம்தந்தை பெயரை வைத்து அழகு பார்த்தவர் .தாம் வாழ்ந்த சாலிகிராமத்தில் தெரு ஒன்று அமைத்து அதற்கு அருணாசலம் ரோடு என பெயரிட்டார் .அது இன்றும் அந்த பெயரிலேயே அழைக்க படுவது நாம் அனைவரும் அறிந்ததே ..தந்தை நினைவாக தம் ஒரு மகளுக்கு 'அருணா ' என பெயரிட்டு அழகுபார்த்தவர்.தந்தையின்
எழுத்தையும் சேர்த்து தம் பிள்ளைகளுக்கு A.K.V.என்ற இனிஷியல் தந்து தனித்து ஓர் அடையாளம் காட்டியவர் .
தாயார் ராமாமிர்தம் -இவர் மானாங்கோரை கிராமம் தவசியா பிள்ளை மகள் ஆவார் .அம்மையார் வேலனாரின் வளர்ச்சிக்கு மிகவும் பாடுபட்டவர் இவருக்கு குழந்தை வேலன் ,சிவசுப்ரமணியம் என இரு மகன்கள் உண்டு . .தாமே தனித்து நின்று தம் பிள்ளையை வளர்த்து இவுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியவர். .வேலன் தம் தாயாரிடம் மிகுந்த மரியாதையும் ,பாசமும் வைத்திருந்தார் .
அன்னாரின் இளமையும் ,கல்வியும் -
பள்ளி பருவம் தொடங்கும் முன்பாகவே தந்தையை இழந்த வேலன் தன் தாயின் பாதுகாப்பில் நன் முறையில்
வளர்க்க பட்டார். வேலனுக்கு .தம்பி ஒருவர் உண்டு .பெயர் சிவசுப்ரமணியன் .அவர் பிறந்த ஊரில் பள்ளியும் இல்லை .படிக்கவோ வசதியும் இல்லை பாபநாசத்தில் ஓர்
உறவினர் வீட்டில் தங்கி தொடக்கக்கல்வியையும் ,
அய்யம்பேட்டை உறவினர் வீட்டில் தங்கி கழக உயர்நிலை
ப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்புவரை பயின்று தேர்ச்சிப்
பெற்றார் .பின்னாளில் 'மாட்டுக்கார வேலன்' கதையை
எழுதிய வேலன் அன்று மாடு மேய்க்கும் சிறுவனாகவும்
வாழ்ந்தார் என்பதும் உண்மையே!!
இளமையில் வேலன்
தஞ்சாவூர் சிவகங்கை பூங்காவிலுள்ள
அரசினர் ஆசிரியர் பயிற்சியில் பயின்ற அவர் கரந்தை
தமிழ் சங்கத்தில் நடைபெறும் இலக்கியக் கூட்டங்கள் ,
,உரையாடல்களில் கலந்து கொண்டு சங்க செயலாளர்களின்
நன் மதிப்பை பெற்று அங்குள்ள 'பெத்தாச்சி புகழ் நிலைய
-த்தில் மதிப்பியல் காப்பாளராக பணியாற்றினார்
ஆசிரியர் பயிற்சியும் புலவர் பயிற்சியும் பயின்ற
காலங்களில் தமிழ் சங்கத்திற்கு உரையாற்ற வருகை
தரும் நாவலர் சோமசுந்தரபாரதியார் .,பண்டிதமணி,
கதிரேச செட்டியார் , பெருஞ்சொல் விளக்கனார் ,ரா .பி .
சேதுப்பிள்ளை ,வெள்ளக்கால் சுப்ரமணிய முதலியார் ,
சுவாமி விபுலானந்த அடிகளார் போன்ற பெரும் புலவர்களுடன் பேசிப் பழகும் வாய்ப்பினைப் பெற்றார் .
அவர்களின் அறிவும் ,புலமையும் தாமும் பெற ஆர்வம்க்
கொண்டார்
பின்னர் வேலனார் கரந்தைத் தமிழ்ச் சங்க இராதாகிரிட்டினத் தொடக்க பள்ளியிலும்தஞ்சை நகரில் வீரராகவா உயர்நிலை பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றினார்
.
ஏ .கே .வேலனுக்கு தந்தை பெரியாரின் அழைப்பு
நான்கு சுவர்களுக்கிடையே ,நாற்பது மாணவர்களுக்கு ஆசிரியனாக ,
உயிரெழுத்து 12, மெய்யெழுத்து 18 என்று
அரைத்த மாவையே ஏன் அரைத்துக்
கொண்டிருக்கிறாய் ,நாலரைக் கோடித்
தமிழர்களுக்குப் பாடம் சொல்ல அழைக்கிறேன் ,
வெளியே வா!
- தந்தை பெரியார்
தந்தை பெரியாரின் அழைப்பை ஏற்று பள்ளி ஆசிரியர் வேலையை விட்டுவிட்டு திராவிட இயக்கத்தில் சேர்ந்தார் .'எரிமலை' எனும் இதழை நடத்தினார் .இது
திராவிட கழக கொள்கையை பரப்பும் ஏடாக அமைந்தது .
அத்தருணத்தில் நாத்திகனாக வாழ்ந்த அவர் தம் பெயரை
A .K .வேலன் என மாற்றிக் கொண்டார் .
வேலனின் இல்லற வாழ்க்கை வாழ்க்கை
இவர்தான் ஏ .கே.வேலனின் மாமனார் திரு.கந்தசாமிபிள்ளை .இவரது கைத்தடியில் நீண்ட வாள் [கத்தி ]ஒன்று இருக்கும்
இவர் சிலம்பாட்டத்தில் வல்லவராய் திகழ்ந்தார்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் வையசேரிகோனூர் பெருந் நிலக்கிழார் கந்தசாமி பிள்ளையின் அன்பு
மகள் செயலக்குமியைவேலன் திருமணம்செய்து கொண்டார் .
வேலன் தனது ஒன்று விட்ட சகோதரி கனகவல்லியின் மகளை மிகுந்த விருப்பத்துடன் மணந்து கொண்டார்
இவர் வேலன் மனைவி செயலக்குமி
. இன்முகமும் .இனியவை கூறலும் ,அன்பு செய்தலும் ,
பொறுமை குணம் உடைய இருவரும் உற்றாரும்
உறவினரும் போற்றும் வகையில் வாழ்க்கை நடத்தினர்
இவர்களுக்குப் பெண் மக்கள் அறுவரும் ,ஆண் மக்கள்
மூவரும் பிள்ளைகளாகப் பிறந்தனர் .செந்தமிழ் செல்வி ,
வண்டார்குழலி ,செந்தாமரை ,விஞ்ஞானி ,அருணா,
பவானி ,மீனாட்சி ,சிவஞானி ,கலைஞானி என பெயரிட்டார் .இதில் 'விஞ்ஞானி 'என்ற பெயர் அறிஞர்
அண்ணாவால் வைக்கப் பட்டது
குடும்பத்தினருடன் வேலன்
வேலன் தம் பிள்ளைகளுக்கு செல்லபிராணியாக யானை
ஒன்றை வாங்கி வீட்டில் வளர்த்தார்
வேலனின் அருமை மகன்கள் ,விஞ்ஞானி
சிவன் என்கின்ற சிவஞானி ,கலைஞானி மூவரும்
சிறு வயதில்
..வேலன் தம் மக்களுக்கு தாம் பிறந்த தஞ்சை மாவட்டத்தில் தம் மைத்துனர்
க . திருஞான சம்பந்தம் அவர்களின்
துணையுடன் வாழ்க்கைத் துணைகளை தேடி தந்தார் .இவர் வேலன் அவர்களின் வாழ்க்கையின் நன்மை ,தீமைகளை பகிர்ந்து கொண்டவர்.
ஒரு பாடலாசிரியர் .தம் தந்தையின் 'உறங்காத கண்கள் '
படத்திற்கு சங்கர் கணேஷ் இசை அமைப்பில் பாடல்கள்
எழுதினார்
2002 ஆம் ஆண்டு' நட்சத்திரப் பூச்சரம்' என்ற
கவிதை நூலை எழுதி மணிமேகலை பிரசுரம்
மூலம் வெளியிட்டார் .
ஏ .கே.வேலனின் மகன் விஞ்ஞானி
ஏ .கே .வேலனின் மகன் சிவஞானி என்கின்ற சிவன்
ஏ .கே .வேலனின் மகன் கலைஞானி
கலைமாமணி ஏ .கே .வேலன் படத்திறப்பு விழாவில்
முன்னால் அமைச்சர் திரு.ஆர் .எம் .வீரப்பனுடன்
வேலன் குடும்பத்தினர்
வேலன் அவர்களின்இலக்கியப்பணி
தஞ்சை வீரராகவா உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி
- ய போது மாணவர்களுக்கு அவர் சொன்ன இலக்கிய
கதைகள் அதிகம் . கரந்தை தமிழ் சங்கத்தில் வெளி வந்த
'தமிழ்ப்பொழில் ' எனும் தமிழாராய்ச்சித் திங்கள் இதழில் 'உழவன் ' என்ற புனைபெயரிலும் ' அ .குழந்தை
வேலன் ' என்ற பெயரிலும் கட்டுரைகள் எழுதினார் .
அவை 1943,1945 ஆம் ஆண்டு இதழ்களில் வெளிவந்தது .
வேலன் எழுதிய' சூறாவளி' நாடகம் கும்ப கோண
-த் தில் தேவி நாடக சபைனரால் நடத்த பெற்றது
அதன் புரட்சி வசனங்கள் ,கருத்துக்கள் உளவு துறையினரால் ஆய்வு செய்யப்பட்டது.அதன் விளைவாக
வேலன் பணி புரிந்த பள்ளிக்கு உரிமம்ரத்து செய்யப்
படும் என மிரட்டினார்கள்.ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்திலும்,திராவிட இயக்கத்திலும் ஈடு பட்டு
இருந்த வேலனார் தாமாகவே விலகிக் கொண்டார்
பெரியாரின் அழைப்பை ஏற்ற அவர் சுய மரியாதை
சொற்பொழிவாளராக விளங்கினார் .இனி வேலனாரின் அரசியல் வாழ்க்கை மற்றும் பொது வாழ்க்கையைப்
பற்றி அடுத்த ப்ளோகில் பார்க்கலாம் .இனி வேலன்
அவர்களின் நினைவாக சில புகைப்படங்கள்
திரு.கரந்தை ஜெயக்குமாருக்கு நன்றி . விவரம் ;
வலைப்பதிவு ;கரந்தை ஜெயக்குமார்
இடுகை ;பள்ளிக்காக
இணைப்பு ;http://karanthaijayakumar.blogspot.com/2011/10 01/archive html
blogger ஆல் இயக்கப்படுகிறது http://www.blogspot.com
.ஏ கே .வி .ஜெயலக்குமி தமது மகன் சிவியுடன்
வேலனின் தாயார
ஏ .கே.வி .ஜெயலக்குமி அவர்கள் வேலன் அவர்களால்
பாப்பா என அன்புடன் அழைக்கப்பட்டவர் .மீண்டும் சந்திப்போம் .நன்றி .தங்களிடம் ஆதாரத்துடன் ஏதேனும்
தகவல் மற்றும் புகைப்படம் இருப்பின் அனுப்ப வேண்டிய மெயில் ஐ .டி akvelanfamily@gmail.com
முன்னால் அமைச்சர் திரு.ஆர் .எம் .வீரப்பனுடன்
வேலன் குடும்பத்தினர்
வேலன் அவர்களின்இலக்கியப்பணி
தஞ்சை வீரராகவா உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி
- ய போது மாணவர்களுக்கு அவர் சொன்ன இலக்கிய
கதைகள் அதிகம் . கரந்தை தமிழ் சங்கத்தில் வெளி வந்த
'தமிழ்ப்பொழில் ' எனும் தமிழாராய்ச்சித் திங்கள் இதழில் 'உழவன் ' என்ற புனைபெயரிலும் ' அ .குழந்தை
வேலன் ' என்ற பெயரிலும் கட்டுரைகள் எழுதினார் .
அவை 1943,1945 ஆம் ஆண்டு இதழ்களில் வெளிவந்தது .
வேலன் எழுதிய' சூறாவளி' நாடகம் கும்ப கோண
-த் தில் தேவி நாடக சபைனரால் நடத்த பெற்றது
அதன் புரட்சி வசனங்கள் ,கருத்துக்கள் உளவு துறையினரால் ஆய்வு செய்யப்பட்டது.அதன் விளைவாக
வேலன் பணி புரிந்த பள்ளிக்கு உரிமம்ரத்து செய்யப்
படும் என மிரட்டினார்கள்.ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்திலும்,திராவிட இயக்கத்திலும் ஈடு பட்டு
இருந்த வேலனார் தாமாகவே விலகிக் கொண்டார்
பெரியாரின் அழைப்பை ஏற்ற அவர் சுய மரியாதை
சொற்பொழிவாளராக விளங்கினார் .இனி வேலனாரின் அரசியல் வாழ்க்கை மற்றும் பொது வாழ்க்கையைப்
பற்றி அடுத்த ப்ளோகில் பார்க்கலாம் .இனி வேலன்
அவர்களின் நினைவாக சில புகைப்படங்கள்
வேலன் மனைவியுடன் வேலன் தம் மனைவி ,மகன்
விஞ்ஞானியுடன்
ஏ .கே .வேலனைப் பற்றி ப்ளாக் ஒன்றை ஏற்படுத்தியதிரு.கரந்தை ஜெயக்குமாருக்கு நன்றி . விவரம் ;
வலைப்பதிவு ;கரந்தை ஜெயக்குமார்
இடுகை ;பள்ளிக்காக
இணைப்பு ;http://karanthaijayakumar.blogspot.com/2011/10 01/archive html
blogger ஆல் இயக்கப்படுகிறது http://www.blogspot.com
.ஏ கே .வி .ஜெயலக்குமி தமது மகன் சிவியுடன்
வேலனின் தாயார
பாப்பா என அன்புடன் அழைக்கப்பட்டவர் .மீண்டும் சந்திப்போம் .நன்றி .தங்களிடம் ஆதாரத்துடன் ஏதேனும்
தகவல் மற்றும் புகைப்படம் இருப்பின் அனுப்ப வேண்டிய மெயில் ஐ .டி akvelanfamily@gmail.com
தங்களின் வலைப் பூவில் என்னையும் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. வலைப் பூ முகவரியில் எழுத்துக்கள் தவறாக உள்ளன. கலைமாமணி ஏ.கே.வேலன் அவர்களைப் பற்றிய எனது கட்டுரையினைக் காண கீழ்க் காணும் முகவரியை பயன்படுத்தவும்
ReplyDeletehttp://karanthaijayakumar.blogspot.com/2011_10_01_archive.html
சரியான முகவரி மாற்றப்பட்டது.thanks
ReplyDelete