Wednesday, April 24, 2013

AK VELAN TRUST

       AK VELAN  TRUST
  [ஏ .கே.வேலன் டிரஸ்ட்] 

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் 
குறியெதிர்ப்பை நீர துடைத்து .
வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது ,மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயனை எதிர்ப் பார்த்து கொடுக்கும் 
தன்மை உடையது .[திருக்குறள் ]

.கே.வேலன் மறைவிற்குப் பின் திருவருள்.புலவர் ஏ.கே.வேலன்அவர்கள்பெயரில் 2009 இல்அவரது குடும்பத்தினரால் ஏ .கே.வேலன் டிரஸ்ட் துவங்கப் பட்டது    ,                      அந்த டிரஸ்ட் மூலம் தங்களால் இயன்ற சில நற்பணிகளை வேலன் குடும்பத்தினர்செய்துவருகின்றனர் .இவை அதன் நிர்வாகியான திரு.K.சிவன் 
[A.K.வேலனின்  மகன் ஏ .கே.வி.சிவஞானி ]மூலமாக நல்ல  முறையில் நடைப் பெற்று வருகிறது இதனை திருமதி .அல்லிராணி சிவன் அவர்கள்
பொறுப்பேற்று  கவனித்து வருகிறார்கள் .
வேலனின் தாயார் இராமாமிருதம் அம்மாள் நினைவு நாள்,ஏ .கே.வேலன் அவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள்,வேலனின் மனைவி 
ஜெயலக்குமி அம்மாள் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள்  போன்ற நாட்களிலும், தீபாவளி  மற்றும் பொங்கல் நாட்களிலும் இவர்கள் சில தொண்டு நிறுவனங்களுக்கு சென்று இயன்ற அளவிற்கு நன்கொடை ,அரிசி உணவு,உடைபோன்றவற்றை  செய்து வருகின்றனர் 
AK VELAN  TRUST அன்புடன் ஆதரவளிக்கும் 
சில நிறுவனங்கள் 
1.சிவசக்தி மன வளர்ச்சி குன்றியோர் இல்லம்- சென்னை-115
2.மணப்பாக்கம் ஆதரவற்றோர் இல்லம்=சென்னை-116
3.ஆலயம் -ஆண்பிள்ளைகள் அனாதை இல்லம் -ஆலப்பாக்கம் 

4.சாலமன் குழந்தைகள் காப்பகம்- -அன்பு நகர் - ஆழ்வார் திருநகர்  
5.பாதை -பெண் குழந்தைகள் காப்பகம்

மேலும்ஏ.கே.வேலனின் மகள் திருமதி.பவானி ரெங்கராஜன் மூலம் அவரது மகன்கள் திரு.பாரத் ரெங்கராஜன்[சென்னை] ,அவரது சகோதரர் திரு.ரகுவீர் ரெங்கராஜன் [சிங்கப்பூர் ] அவர்களால் 
1.சங்கீதா மன வளர்ச்சி குன்றியோர் இல்லம் -
தஞ்சாவூர் --அக்டோபர் 24 வேலன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டும் 
2.அன்பு இல்லம் -தஞ்சாவூர் --நவம்பர்  தீபாவளி பண்டிகைக்கும் 
பாதை -பெண் குழந்தைகள் காப்பகம் -சென்னை 
ஆகியவற்றிக்கு ஏ .கே.வி.ஜெயலக்குமி அம்மாளின் பிறந்த நாளை முன்னிட்டுஇனிப்பு ,காரம் , மற்றும் சில தேவையான பொருட்களும்  வழங்கப் பட்டது ,
.
தங்களுக்கும் AK VELAN TRUST மூலம் இத்தகைய தொண்டு நிறுவங்களுக்கு ஏதேனும் செய்ய விருப்பம் இருப்பின் அணுக வேண்டியவர் திருமதி.அல்லிராணி சிவன்
கைப்பேசி  எண் -9003187597.நீங்களே நேரில் சென்று வழங்க 
ஏற்பாடு செய்யப் படும் .இது விளம்பரமோ ,வியாபார நோக்கமோ அல்ல .
 அனைவரது வாழ்த்துகளுடன்  இப்பணி மேலும் மேலும் தொடரும் .